தினமணி கொண்டாட்டம்

உணவு தட்டையும் சாப்பிடலாம்...

20th Jun 2021 06:00 AM | -சுதந்திரன்

ADVERTISEMENT


கரோனா காலத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக கோதுமை உமியால் அல்லது தவிட்டினால் செய்யப்பட்ட உணவுத் தட்டுகள், ஸ்பூன்கள், கிண்ணங்கள், கத்திகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

சாப்பிட்டு முடிந்ததும் உணவுத் தட்டையும், ஸ்பூன்களை, கிண்ணங்களையும் சாப்பிட்டுவிடலாம். அப்படிச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால் ஆடு. மாடு போன்ற பிராணிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். மீன் வளர்த்தால் மீன்களுக்கு உணவாகப் போடலாம். அதுவும் இயலாத பட்சத்தில் பயன்படுத்திய தட்டு, கிண்ணம், ஸ்பூன்களை கழிவுகளில் சேர்த்துவிடலாம். அவை சில நாட்களில் மக்கி மண்ணுக்கு உரமாகிவிடும்.

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விநயகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் கோதுமை உமியால் இந்தப் பொருள்களை உருவாக்கியுள்ளார்.

""அடுத்த ஆண்டிலிருந்து ஒரு முறை பயன்படுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு இந்தியா முழுவதும் தடை வரும் என்று சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

அப்படி தடை வரும் பொழுது, ஒரு முறை பயன்படுத்தும் இந்த சுற்றுபுறச் சூழலுடன் இணைந்து நிற்கும் கோதுமை உமி தட்டுகள், கிண்ணங்கள், ஸ்பூன்களுக்கு வரவேற்பு கூடும். இந்தவகை தட்டுகள், இதர பொருள்கள், தானியங்கி இயந்திரங்களால் செய்யப்படுபவை. கரோனா காலத்தில் உணவை வாங்கி வர.. அல்லது விநியோகம் செய்ய, உணவைப் பார்சலாகக் கொடுக்க சிறு பெட்டிகளையும் உருவாக்கியிருக்கிறேன்.

அவைகளில் உணவுகளை வைத்து வழங்கலாம். பிளாஸ்டிக் பெட்டிகளின் பயன்பாட்டைக் குறைக்கவே இந்த ஏற்பாடு. கோதுமை உமியால் செய்யப்படும் பொருள்கள் மைனஸ் 10 டிகிரி குளிரையும், 140 டிகிரி வெப்பத்தையும் தாங்கும். அதனால் மின்னடுப்புகளில் உணவுப் பொருள்களை சூடுபடுத்தவும் உமியால் செய்யப்படும் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்'' என்கிறார் பால
கிருஷ்ணன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT