தினமணி கொண்டாட்டம்

சுவாரஸ்யமான சாம்ராஜ்ஜியங்கள்

20th Jun 2021 06:00 AM | -கோட்டாறு ஆ. கோலப்பன்

ADVERTISEMENT

 

உலக நாடுகளுக்கு மத்தியில் யாருக்கும் தெரியாத பல சுவாரஸ்யமான சாம்ராஜ்ஜிய நாடுகள் உள்ளன.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா, 748 கி.மீ பரப்பளவு கொண்டது. ஒரு லட்சத்து ஆறாயிரம் மக்கள் வசிக்கும் இந்த நாடு, 1773-இல் இங்கிலாந்து கேப்டன் ஜேம்ஸ் குக்கால் கண்டுபிடிக்கப்பட்டது. கேப்டன் குக் இந்த தீவை நட்புத்தீவு என்று அழைத்தார். ஆனால் இங்கு வசித்தவர்களோ  கேப்டன் குக்கை கொல்ல நினைத்தார்கள். 

போர்னியோத் தீவில் அமைந்துள்ளது புரூனை ராஜ்ஜியம். இது ஐந்தாயிரத்து 765 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு மக்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கப்படுவதில்லை. புரூனை ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யும் சுல்தான். உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவர்.

ADVERTISEMENT

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்வாசிலாந்து 17 ஆயிரத்து 360 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த நாட்டின் அளப்பரிய இயற்கை அழகினால் இது மர்மங்கள் ஆழ்ந்த நாடு என்று அழைக்கப்படுகிறது. ஸ்வாசிலாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 13 லட்சம்.

30 ஆயிரம் கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் லெசோதே, கடற்கரை மட்டத்தை விட கீழே அமைந்திருக்கும் இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் இருபது லட்சம்.

இத்தாலியன் சார்தானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு டவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டு மொத்த பரப்பளவு ஐந்து சதுர கி.மீ . இங்குள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். 

இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்டனில் அமைந்திருக்கிறது. ரெடோண்டா. புகையிலை தடையில் இருந்து விலகியிருப்பதற்காக தன்னைத்தானே தனி சாம்ராஜ்ஜியமாக அறிவித்துக் கொண்டது. 

Tags : சுவாரஸ்யமான சாம்ராஜ்ஜியங்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT