தினமணி கொண்டாட்டம்

தெரியுமா?...

DIN

நூறாவது ஆண்டு


சத்யஜித்ரேயின் நூறாவது பிறந்த ஆண்டு இது.  

இதனைக் கொண்டாடும் விதமாக பர்ரோ மார்க்கெட், அவருடைய பட போஸ்டர்களை ஏ3 அளவில் சுருக்கி அடித்து பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளது. 

சுவரில் மாட்டும் செராமிக் தகடுகளில் அவருடைய படக் காட்சிகள் கையினால் வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 

"சாருலதா',  "தேவி' படங்களில் பயன்படுத்தப்பட்ட புடவைகள், குர்தாக்கள், எம்பிராய்டரி செய்த ஜாக்கெட்டுகள் என பலவும் காட்சிக்கு விற்பனைக்கும் உள்ளன. 

சத்யஜித்ரே சித்ர வேலைப்பாடுகளை செய்யும் திறன் படைத்தவர், வரைபட வடிவமைப்பாளர், எடிட்டர் ஆக அவற்றை பிரதிபலிக்கும் ஐயிட்டங்களும் இங்கு உண்டு.

-ராஜிராதா, பெங்களூர்


வெற்றிக்கதை


மகாபாரதம் காப்பியத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டு உலகம் அறியச் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டார் பிரபு பிரதாப் சந்திர ராய். இதை தன் முழு நேரப்பணி என்று சூளுரைத்து செயல்படுத்தினார். சமஸ்கிருதத்திலிருந்து மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக் கூடிய ஆற்றல் பெற்ற ஒரு அறிஞரைத் தேடி பல இடங்களுக்கு தானே சென்று விசாரித்தார்.

ஆறுமாத முயற்சிக்குப்பின் மோகன் கங்குலி என்ற அறிஞரை சந்தித்து விவரம் கூறினார். அவரும் இப்பணிக்கு உடன்பட்டார். 

பிரதாப்  சந்திர ராயிடமிருந்து பணம் முழுவதும் செலவானது. இந்த புனிதமான நல்ல பணிக்கு உதவ முன் வருவோரிடமிருந்து நேரில் சென்று நிதி திரட்ட இந்தியா முழுவதும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பயணம் செய்தார். நண்பர்களிடமிருந்து அறிஞர்களிடமிருந்து கல்வி வள்ளல்களிடமிருந்து ஆன்மிகப் பற்றுள்ளவர்களிடமிருந்து அவருக்கு நிதி கிடைத்தது. நிதி திரட்டும் பொழுது அவருக்கு விஷக் காய்ச்சல் வந்தது. படுத்த படுக்கையானார்.

தன்னுடைய மனைவியிடம் ""புத்தகத்தை அச்சிட்டு வெளியிட தேவையான பணம் இருக்கிறது. வீணாக என்னுடைய ஈமச்சடங்கிற்கு பணத்தை செலவிடாதே. பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்'' என்று கூறினார்.

பேசுவதற்குக் கஷ்டப்பட்ட போதும் மனைவியிடம் எழுதிக்காட்டி தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். தன்னுடைய உயிர் போனாலும் தொடர்ந்து செயல்பட்டு ஆங்கில மகாபாரத நூலை வெளியிட வேண்டும் என்று கூறினார். சில நாள்களில் அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய மனைவி, கணவர் பிரதாப் சந்திர ராயின் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றினார். ஓராண்டிற்குப் பின் ஆங்கிலத்தில் மகாபாரத நூல் வெளியிடப்பட்டது. 

பிரதாப் சந்திர ராயின் புகழ் உலகம் முழுவதும் இன்றும் நிலைத்து நிற்கிறது.

-உ.ராமநாதன்


புதிய கருவி கண்டுபிடிப்பு

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தோனிக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து  சுவாச முறை மூலம் கரோனா சோதனை செய்வதற்கான புதிய கருவியை தயாரித்துள்ளன. இந்த கருவியின் மூலமாக சோதனை செய்தால் ஒரு நிமிடத்தில் கரோனா தொற்று உள்ளதா என கண்டறிந்து விட முடியும். சிங்கப்பூருக்குள் வரும் பயணிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பொருட்டு சோதனை சாவடியில் தங்களது தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கான முயற்சியில் சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிரித்தோனிக்ஸ் நிறுவனம் செயலாற்றி வருகின்றன. இக்கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி தந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT