தினமணி கொண்டாட்டம்

இரு திரைகளிலும் பயணம்

DIN


எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் ரீமேக் செய்த படம் "சட்டம் ஒரு இருட்டறை'. இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தமன்குமார். இப்போது "வானத்தைப் போல' மெகா தொடரில் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து பயணிக்கிறார். அவரிடம் பேசும் போது... ""ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு,  நடிப்புப் பயிற்சி பெற்று சினிமாவுக்கு வந்தேன்.  "சட்டம் ஒரு இருட்டறை' படத்தைத் தொடர்ந்து " தொட்டால் தொடரும்', "படித்துறை', "நேத்ரா' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். இப்போது "கண்மணி பாப்பா', "யாழி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.  

சின்னத்திரை வாய்ப்பு என்பது நானே எதிர்பார்க்காத ஒன்று. ஆனால் சினிமாவை விட நல்ல வெளிச்சத்தை இது எனக்கு கொடுத்திருக்கிறது. எதுவாக இருந்தாலும் கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்துவிட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும். எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். என் சினிமா பயணத்தில் கிடைத்த அனுபவம் இது. எல்லாவற்றுக்கும் நேரம் எடுத்து,  புதிதாக யோசித்து உழைக்கத் தயாராக இருக்கிறேன்.   உன்னதமான நேரம் இது. சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அப்படி வரும் படங்களில் நான் நிச்சயம் இருப்பேன். கேட்டதை விட, நினைத்ததை விட எல்லாமே அடுத்தடுத்து நல்லதாகவே நடந்துக் கொண்டு வருவதால்,  இது நிச்சயம் '' என்றார் தமன்குமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT