தினமணி கொண்டாட்டம்

எனது அடையாளம்

DIN


மணிகண்டன் இயக்கி விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற படம் "காக்கா முட்டை'. இதில்  இளம் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் பெரிய காக்கா முட்டையாக விக்னேஷூம், சின்ன காக்கா முட்டையாக  ரமேஷூம் நடித்து கலக்கியிருந்தனர். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷும் இணைந்து தயாரித்திருந்தனர். 

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் ஆகிய இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகுதான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகையாக ரசிகர்களால் அறியப்பட்டார். இந்த படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை நினைவுக் கூர்ந்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ""நாள்கள் எவ்வாறு நகர்கிறது என்பது தெரியவில்லை.  6 ஆண்டுகளுக்கு முன்பு "காக்கா முட்டை' படம்  வெளியானது. இதயத்திற்கு நெருக்கமான இந்த படம்தான் எனது அடையாளம். பல தடைகளை தாண்டி வாழ்க்கையில் என்னை உயர்த்திய படம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT