தினமணி கொண்டாட்டம்

இசையமைப்பாளரின் குறும்படம்

6th Jun 2021 06:00 AM

ADVERTISEMENT

 

" பூ', "களவாணி' படங்களின் மூலம் கவனிக்கத்தக்க இசையை வழங்கியவர் எஸ்.எஸ்.குமரன். தற்போது இவர் கரோனா விழிப்புணர்வு குறும்படத்தை இயக்கியுள்ளார்.   கரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும் கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த குறும்படத்திற்கான படப்பிடிப்பை அரசு அறிவித்துள்ள சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து இயக்கியுள்ளார். சென்னை அசோக் நகர் பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவரது இந்த முயற்சிக்கு ஊக்கம் கொடுத்து இந்த குறும்படத்தை தயாரிக்க பக்கபலமாக இருந்தது சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வு தொண்டு நிறுவனம். "நோ கொரோனா மூவ்மென்ட்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த குறும்படம்  ஒன்றரை நிமிடம் ஓடக் கூடியது.

Tags : இசையமைப்பாளரின் குறும்படம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT