தினமணி கொண்டாட்டம்

நினைவுச் சின்னம்

6th Jun 2021 06:00 AM | -தங்க.சங்கரபாண்டியன்

ADVERTISEMENT


உப்பு சத்தியாகிரகத்தின் போது, ராஜாஜியும் தொண்டர்களும் ஆங்கில அரசின் ஆணையை மீறி உப்பு அள்ளிய இடத்திலேயே அந்த நினைவுச் சின்னம் அமைவது பொருத்தமாக இருக்கும் என்று கருதினார்கள்.

ராஜாஜியும் தொண்டர்களும் உப்பு அள்ளிய அந்த இடம் அப்போது ராமையாப் பிள்ளைக்குச் சொந்தமாக இருந்தது. வேதாரண்யம் வடக்கு வீதியில் இருந்த அந்த இடத்தை விலைக்கு வாங்கினார் சர்தார் வேத ரத்தினம்.

விரைவிலேயே ராஜாஜி உப்பு அள்ளிய இடத்தில் ஒரு நினைவு ஸ்தூபி எழுந்து நீலத் திரைக்கடலின் பின்னணியில் வானளவு நின்று அந்த மகத்தான சம்பவத்தை கதை கதையாக மக்களுக்குச் சொல்ல ஆரம்பித்தது.

சர்தார் வேதரத்தினம் காலமான பிறகு அவர் உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் கட்டுவதற்காக வாங்கிய நிலத்தில் அவருடைய குமாரர் அப்பாக்குட்டி, தந்தை விரும்பியவாறே ஓர் அழகான மண்டபத்தை கட்டினார். வேதாரண்யம் வடக்கு வீதியில் சர்தார் வேதரத்தினம் வீட்டுக்கு எதிரில் அது இருக்கிறது. 

ADVERTISEMENT

(கங்கை பகீரதன் எழுதிய "மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்' நூலிலிருந்து)

Tags : நினைவுச் சின்னம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT