தினமணி கொண்டாட்டம்

மீண்டும் விஜய்க்கு ஜோடி

6th Jun 2021 06:00 AM

ADVERTISEMENT

 


விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் "மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.  வசூலில் சாதனை செய்த இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த நிலையில் "மாஸ்டர்' படக்குழுவினரோடு மீண்டும் இணைவதில் ஆர்வத்துடன் இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் "" விஜய்யுடன் நான் நடித்த முதல் படம் "மாஸ்டர்'. விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகருடன் நடிக்கும் ஆர்வம் பெரிய அளவில் இருந்தது. விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் போன்ற திறமைசாலிகளுடன் பணியாற்றியது நல்ல அனுபவத்தை தந்தது. நாங்கள் அனைவரும் படப்பிடிப்பில் பல மணிநேரம் ஒன்றாக செலவழித்தோம். எனது சினிமா வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். மீண்டும் இதே படக்குழுவினரோடு இணையவேண்டும்'' இவ்வாறு தனது விருப்பத்தை மாளவிகா தெரிவித்துள்ளார்.

Tags : மீண்டும் விஜய்க்கு ஜோடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT