தினமணி கொண்டாட்டம்

பார்வையாளர்களை கவர்ந்த பாலிவுட் படங்கள்

6th Jun 2021 06:00 AM | -ஜி.அசோக்

ADVERTISEMENT


கரோனா  பொது முடக்கம் காரணமாக  தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும், அப்படியே திறந்தாலும் மக்கள் படம் பார்க்க வருவார்களா? எனப் பல கேள்விகள் இருக்கின்றன. எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை, இந்த கரோனா அலை ஓய்ந்த பின் தியேட்டர்களிலேயே படத்தை வெளியிடலாம் எனப் பல தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர். இந்த நிலையில் தீவிர சினிமா ரசிகர்கள் எந்தெந்த படங்களை தேடிப் பார்க்கலாம் என ஓடிடி தளங்ளை நாடி வருகின்றனர். அப்படி பாலிவுட் ஒடிடி தளத்தில் அநேக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படங்களை இங்கே பட்டியலிடுகிறோம். இதுவரை பார்க்காதவர்களுக்காக...

புஜ் - தி ப்ரைட் ஆஃப் இந்தியா

1971-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இது உண்மைச் சம்பவம் என்பதால் அந்த போர் காட்சிகளின் உண்மையான காட்சிகளையும் படத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அபிஷேக் துதையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விமான படைத் தலைவர் விஜய் கார்னிக்காக அஜய் தேவ்கன் நடித்துள்ளார். சஞ்சய் தத், சோனாக்ஷி சின்ஹா, ப்ரணிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரணிதாவுக்கு இதுதான் முதல் பாலிவுட் படம்.

லூட்கேஸ்

ADVERTISEMENT

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் கிருஷ்ணன். காமெடியாக உருவாக்கியிருக்கும் இப்படத்தின் ஹீரோ குணால் கெம்மு. 2000 ரூபாய் நோட்டுகள் நிறைந்த சிவப்பு நிற சூட்கேûஸச் சுற்றி நடக்கும் கதை. ஏப்ரல் 10, 2020 அன்று வெளியாவதாக இருந்த இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

பிக் புல்

2010-இல் விவேக் ஓபராயை வைத்து "பிரின்ஸ்' படத்தை இயக்கிய குக்கி குலாடி என்பவர் இயக்கியிருக்கும் படம். அஜய் தேவ்கன் தயாரித்து அபிஷேக் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். "போல் பச்சன்' படத்திற்குப் பிறகு, அஜய் தேவ்கன் தயாரிப்பில் அபிஷேக் பச்சன் நடிக்கும் படம் இது. 1980 முதல் 1990 வரை ஸ்டாக் மார்க்கெட்டில் பல குற்றங்களை செய்த ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹர்ஷத் மேத்தா கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். இலியானா, நிகிதா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

சடக் 2

1991-இல் ஹிந்தியில்  ஹிட்டான "சடக்' படத்தின் தொடக்கம்தான் இது. தமிழில் வசந்த் இயக்கத்தில் பிரசாந்த், தேவயானி, பிரகாஷ்ராஜ் நடித்த "அப்பு' படத்தின் உண்மை பதிப்பு "சடக்'. அந்தப் படத்தை இயக்கிய மகேஷ் பட்தான் இதற்கும் இயக்குநர். அதில் நடித்த சஞ்சய் தத், பூஜா பட் ஆகியோர் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். "சடக்' படத்தின் அடுத்த பாக தொடர்ச்சி  என்பதால் இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

தில் பெச்சாரா

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படம் இது. 2012-ஆம் ஆண்டு ஜான் க்ரீன் எழுதிய  நாவலை மையப்படுத்தின படம். இந்த நாவலை வைத்து அதே பெயரிலேயே ஒரு அமெரிக்க படம் ஒன்றும் 2014-ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. நடிகைகளின் மேலாளராக இருந்த  முகேஷ் சப்ரா இயக்கும் முதல் படம். சுஷாந்த் சிங், சயீஃப் அலிகான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சஞ்சனா சங்கி எனும் நாயகி இதன் மூலம் அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை.  ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. கூடுதல் சிறப்பாக, சுஷாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தப் படத்தை அனைவரும் இலவசமாகப் பார்த்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது ஹாட்ஸ்டார்.

லக்ஷ்மி பாம்

"காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக். அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்கும் இப்படத்தை ராகவா லாரன்úஸ இயக்கியிருக்கிறார். "காஞ்சனா'விற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றிதான் இந்தப் படத்திற்கும். அவரின் முதல் பாலிவுட் படமும் இதுதான்.  அதில் அக்ஷய் குமாரே நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கடந்த கரோனா அலையின் போதும் வெளியிட தயாரானது. அதன் பின்  நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியானது.

குதா ஹாஃபிஸ்

ஃபரூக் கபீர் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்கும் படம். ஆக்ஷன் த்ரில்லர் பாணிதான் வித்யுத்திற்கான வியூகங்கள். இந்தப் படமும் அப்படியானதுதான். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உஸ்பெக்கிஸ்தானில் எடுத்த படம். இவருக்கு ஜோடியாக சிவலீகா ஓபராய் என்பவர் நடிக்கிறார். போன வருடம் "ஜங்க்லீ', "கமாண்டோ 3' ஆகிய இரண்டு படங்கள் இவர் நடிப்பில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : பார்வையாளர்களை கவர்ந்த பாலிவுட் படங்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT