தினமணி கொண்டாட்டம்

பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா

25th Jul 2021 04:58 PM

ADVERTISEMENT

 

கன்னடத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான "கிரிக்பார்ட்டி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் "கீதா கோவிந்தம்' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டிலும் முந்துகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிகமானோர் பின்பற்றும் தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 19 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Kondattam Rashmika pushed back
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT