தினமணி கொண்டாட்டம்

இசையமைப்பாளரின் ஸ்டூடியோ

25th Jul 2021 05:01 PM

ADVERTISEMENT

 


சவுண்டபிள் எனும் அதி நவீன ஒலியகத்தை வடபழனியில் தொடங்கி உள்ளார் இசையமைப்பாளர்  சக்தி பாலாஜி.   கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக செயல்பாட்டில் உள்ள போதும், கரோனா பெருந்தொற்று காரணமாக இப்போதுதான் முறைப்படி பயணத்தை தொடங்கியுள்ளது.   சவுண்டபிள், திரைத்துறை தொடர்புடைய அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது. சக்தி பாலாஜி பேசும் போது... ""நான் ஓர் இசை அமைப்பாளராகவும் உள்ள காரணத்தால், ஒலி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஸ்டூடியோ ஒன்று நமது ஊரில் தேவை என்று தோன்றியதன் விளைவாக சவுண்டபிளை தொடங்கி உள்ளேன். 

தற்போது டப்பிங் மற்றும் மிக்சிங் உள்ளிட்ட பிரிவுகளுடன் திரைப்பட டப்பிங்கிற்
கான ஸ்டீரியோ வசதியுடன் 7.1 வசதியுடன் மிக்சிங் சூட் உள்ளது. வெப் சீரிஸ் எடுப்பவர்கள் டால்பி அட்மாஸ் வசதி கேட்பதால் அந்த வசதியையும், மற்றுமொரு சூட்டையும் விரைவில் சேர்க்கவுள்ளோம்'' என்றார்.

Tags : Kondattam Composer Studio
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT