தினமணி கொண்டாட்டம்

43 வடிவங்களில் 115 நூல்கள்

பொ. ஜெயசந்திரன்

ஒவ்வொரு மனிதர்களும் வாழ்க்கையில் ஏதோ ஒன்று, இரண்டு துறைகளில் ஜொலிக்கலாம், ஜெயிக்கலாம். ஆனால் ஆசிரியர், செய்தித்துறை, பாடகர், இலக்கியம் போன்ற எண்ணற்ற துறைகளில் வெற்றி கண்ட நாயகர் தான் பண்டிதர்-

ச.வே.பஞ்சாட்சரம். இவர் இலங்கையில் பிறந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். அவரிடம் பேசினோம்:

""என் சொந்த ஊரான யாழ்ப்பாணம் இணுவில். தமிழரசர் காலத்தில் அவ்வரச பரம்பரையால் தமிழ்ச்சங்கம் வைத்து நடத்தப்பட்ட ஊர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலும், பின்னரான ஆங்கிலேயே ஆட்சிக்காலத்திலும் சிறந்து விளங்கிய ஊர். இலங்கை, இந்தியா, மலாயா, சிங்கப்பூர் புகழ் நாடாக அண்ணாவி நாகலிங்கம் உலகத்தவில் மேதை வீ.தெட்சணாமூர்த்தி, கற்பகவல்லி பாடல் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நவீர மணி ஐயர் முதலான கலைஞர்கள், புலவர்கள் பலரைத் தந்த ஊர்.

இணுவில் மேற்குப் பகுதியில் விவசாயக் குடும்பத்து வேலுப்பிள்ளை-சின்னப்பிள்ளை பெற்றோருக்கு இரண்டாவது மகனாக, இலக்கிய ஆர்வம் மிக்க ஆசிரியர் குணரத்தினத்திற்கு தம்பியாக 1939-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி பிறந்தேன்.

வண்ணை நாவலர் சைவப்பிரகாச பண்டித வகுப்பு என்பனவற்றில் கல்வியைப் பெற்றேன். 1964 ஜீலையில் அரசாங்க ஆங்கிலஆசிரியராக நியமனம் பெற்று பல பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம், தமிழ், சைவ சமயம் ஆகிய பாடங்களைக் கற்பித்தேன்.

நவீன இலக்கிய வடிவங்களில் பத்திரிகை கவிதைகள், குழந்தைக் கவிதைகள், நாடகம், குறும்பாக்கள்,ஹைக்கூ கவிதைகள்,சிறுகதை, நாவல், உருவகக் கதைகள், சமூக மற்றும் வீர காவியங்கள், பெரும் காப்பியம் என 25 வகை இலக்கிய நூல்கள் மேலும் பழந்தமிழ்ச் சிற்றிலக்கிய வடிவங்களிலான பக்தி இலக்கியங்களான திருவூஞ்சல்கள், பிள்ளைத் தமிழ்கள், தூதுகள், தலபுராணங்கள், அந்தாதிகள், திருவிரட்டை போன்ற 13 வகை நூல்கள், இலக்கியக்கட்டுரை, வரலாற்றுக்கட்டுரை, பயணக்கட்டுரைகள் போன்று மூன்று வகை நூல்கள் என 43 வடிவங்களில் 115 நூல்கள் இதுவரை நான் எழுதி வெளி வந்துள்ளன.

முழுமையான இலக்கணம் பற்றிய தரிசனத்தை பெற மாணாக்கருக்குத் தடையாக நிலவிவந்த பல இருண்ட பகுதிகள் போதிய விளக்கம் எழுதாமல் விடப்பட்டிருந்த அவர்களை குழப்பம் அடைய வைத்துக் கொண்டிருந்த இலக்கண உண்மைகளை என் வகுப்பு மாணவர்களிடம் நேரடியாக கண்டறிந்து அவற்றுக்கு மரபு தவறாத விளக்கங்களை ஆராய்ந்து புதிதாக எழுதி இந்நூலில் இடம் பெறச் செய்ததால் இது இலங்கை தமிழ் மாணவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று, இலங்கை தமிழிலக்கண நூல் வரலாற்றில் சாதனை படைத்தது.

தமிழ்நாட்டில் செங்காந்தள் பத்திரிகையில் ஆலோசக ஆசிரியராகவும் பணியாற்றினேன். என் பக்திப்பாடல்களை உன்னி கிருஷ்ணன், மாணிக்க விநாயகம், ஹரீஷ் ராகவேந்திரா, மனோ, மதுபாலகிருஷ்ணன், அனுராதாஸ்ரீராம். பிரசன்னா, ராகுல் நம்பியார், பம்பே ஜெயஸ்ரீ, மதுஸ்ரீ, மாலதி போன்ற பாடகர்களும் பாடியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட என் இவ்வகை இசைப்பாடல்கள் இறுவட்டுகளில் இடம்பெற்றுள்ளன'' என்றார் இவர் கடந்த 1965-ஆம் ஆண்டில் இலங்கை அரசால் சிறந்த கவிதை நூலுக்கான சாகித்திய மண்டலப் பரிசு உள்பட 10 வகையான இலக்கிய போட்டிகளிலும் பரிசுகளை பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT