தினமணி கொண்டாட்டம்

மகிழ்ச்சி கொடுப்பது  எது ?

18th Jul 2021 06:00 AM | -ஜெ

ADVERTISEMENT

 

ஒரு பெரிய அறையில் கருத்தரங்கு  நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் பார்வையாளர் அனைவரது கையிலும் ஒரு பலூனை கொடுத்து அதில் தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார். 

இப்பொழுது அந்த பேச்சாளர், "உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள்' என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக தேடினர் . ஒருவருக்கொருவர் நெருக்கித் தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், "ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை, அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்' என்றார். அடுத்த ஒரே நிமிடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

ADVERTISEMENT

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், "இதுதான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம். ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை. நம் சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்' என்றார். 

Tags : kondattam What gives pleasure?
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT