தினமணி கொண்டாட்டம்

விண்வெளி  சுற்றுலா: பங்கேற்கும் முதல் இந்தியர்

18th Jul 2021 06:00 AM | -சுதந்திரன்

ADVERTISEMENT

 

விண்வெளி சுற்றுலாவில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுபவர் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா. கேரளத்தின் புகழ் பெற்ற ஊடகர். சந்தோஷ் இதுவரை 130 நாடுகள் சுற்றிவந்துள்ளார். அநேக சுற்றுலா படங்களைத் தயாரித்து கேரளத்தின் சஞ்சாரம், என்ற சேனலில் ஒளிபரப்பி வருகிறார். இந்தியாவில் சுற்றுலாவுக்காக மட்டும் ஒளிபரப்பாகும் முதல் சேனல் "சஞ்சாரம்' ஆகும்.

2022-இல் ரிச்சர்ட் பிரான்ஸன் ஏற்பாடு செய்யும் விண்வெளி சுற்றுலாவில் சந்தோஷ் இடம் பெறுகிறார். 2005-இல் விண்வெளி சுற்றுலா பயணம் குறித்த அறிவிப்பு வெளியானதும், சந்தோஷ் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டார். பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு சந்தோஷ் விண்வெளி சுற்றுலா 2022 பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சந்தோஷிற்கு 49 வயதாகிறது. விண்வெளிக்குச் செல்ல தேவையான "ஜி டாலரான்ஸ்' பயிற்சியும் சந்தோஷ் பெற்றுள்ளார்.

"இந்தப் பயிற்சியில் உடலின் எடை எட்டு மடங்கு கூடும். இந்தப் பயிற்சி மிகக் கடுமையானது. அதுபோல விண்வெளியில் புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் உடல் எடை குறைந்து விண்வெளியில் நீந்தலாம். ஸ்லோ மோஷனில் விண்வெளியில் மிதந்து விண்கலத்திற்குள் செல்லலாம். இதற்கான பயிற்சியையும் பெற்றுள்ளேன். இன்னும் சில மாதங்களில் எனது விண்வெளி பயணம் நனவாகும்' என்கிறார் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா.

ADVERTISEMENT

அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் வி.எஸ்.எஸ்.யூனிட்டி விண்கலம் மூலம் விண்வெளிக்கு முதல் பயணம் ஜுலை 11-இல் நனவானது. நியூ மெக்சிகோவிலிருந்து தொடங்கிய இந்த வெள்ளோட்ட பயணத்தில் வர்ஜின் கேலக்டிக் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளி பெண் சிரிஷா பந்த்லா (வயது 34) உட்பட 5 பேர் கொண்ட குழு பங்கு கொண்டனர்.

நியூமெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து வி.எஸ்.எஸ்.யூனிட்டி விண்கலம் செங்குத்தாக புறப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட இரட்டை விமானம் 50 ஆயிரம் அடியை எட்டியதும், யூனிட்டி 22 என்ற விண்கலம் விடுவிக்கப்பட்டு, யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கி விண்வெளிக்குச் செல்லும்.

Tags : kondattam Space Travel: The first Indian to participate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT