தினமணி கொண்டாட்டம்

சமையல் நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டும் திரை பிரபலங்கள்!

11th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

 

அடுத்தடுத்த கரோனா பொதுமுடக்கம், படப்பிடிப்புகள் நிறுத்தம், திரையரங்குகள் திறப்பு இல்லை... என்ற தொடர் செய்திகள் திரையுலகினரை பெரிதும் பாதித்துள்ளது. தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நடிகர்கள், பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மாற்றாக வரும் சில வாய்ப்புகளை பயன்படுத்த அவர்கள் தயங்குவதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்த வகையில் அவர்களை பெரிதாக பின் தொடர்கின்றன. விஜய் சேதுபதி முதல் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகின்றன. சன் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சி ஒன்றுக்காக தொடர் படப்பிடிப்புகளில் பங்கேற்று திரும்பியுள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது போல்  நடிகர் ரோபோ சங்கரும் ஒரு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

நிகழ்ச்சியின் பெயர்  "பொங்குறோம் திங்கிறோம்' முழுக்க  முழுக்க நகைச்சுவையோடு இந்த  சமையல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.  குறிப்பாக மலேசிய உணவுகளைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்த இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT