தினமணி கொண்டாட்டம்

கௌரவ வேடத்தில் விதார்த்

24th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ்  சார்பாக இ.வி. கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் "கட்டில்". இந்த திரைப்படத்தில் மூன்று தலைமுறைகளின் வாழ்வியலை உணர்த்தும் விதமாக வைரமுத்து எழுதி ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியிருக்கிறார். அமெரிக்கா- கலிபோர்னியாவில் உள்ள அதி நவீன ஒலிப்பதிவு கூடத்தில் சித்ஸ்ரீராம் பாடிய கட்டில் திரைப்படப்பாடல் பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீகாந்த்தேவா சென்னையில் தனது ஸ்டுடியோவிலிருந்து இணையக்காணொளி  மூலம் இந்தப்பாடலை பதிவு செய்தார். "கோயிலிலே'  எனத்தொடங்கும் இந்தப் பாடலுக்கான சூழலை மிக அழகாக கவித்துவமான முறையில் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் விதார்த் கௌரவ வேடத்தில் கதையை ரசிகர்களுக்குச் சொல்லும் முக்கியக் கதாபாத்திரமாக வருகிறார்.
 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT