தினமணி கொண்டாட்டம்

ரம்யாவின் பதில்

24th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் "சங்கத்தலைவன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார்."ஓகே கண்மணி',"கேம் ஓவர்',"ஆடை' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "மாஸ்டர்' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கரோனா காரணமாக அவ்வப்போது தனது ரசிகர்களுடன் விடியோவில் நேரலையில் பேசியும்,அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்து அறிவுரைகளும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வார். புது வருடம் தொடங்கியதையொட்டி அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ரம்யா. அதில் ரசிகர் ஒருவர்" உங்களைக் கல்யாணம் பண்ணனும்' என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஜாலியாகப் பதிலளித்த ரம்யா ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது என்று அவருக்குப் பதிலளித்திருந்தார்.இவரது இந்த ஜாலியான பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT