தினமணி கொண்டாட்டம்

பூட்டு இல்லாத வீடு

24th Jan 2021 06:00 AM | -அரவிந்தன், தஞ்சை

ADVERTISEMENT


தஞ்சை மாவட்டம் நடுக்காவிரி கிராமத்தில் 222 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூட்டு இல்லாத வீடு ஒன்று அதிக கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது.

தமிழ் அறிஞர், நாவலர், பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். இவரது பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா அருகேயுள்ள நடுக்காவேரி கிராமம். நடுக்காவேரி கிராமத்தில் உள்ள வேங்கடசாமி நாட்டாரின் வீடு கட்டப்பட்டு 222 ஆண்டுகளாகின்றன. ஆனால் இன்றுவரை இந்த வீடு பூட்டப்பட்டதில்லை.

இந்த வீட்டைக் கட்டிய சாம்பசிவம் என்ற கொத்தனார் இந்த வீடு எக்காலத்திலும் பூட்டப்படாமல் இருக்கும் என்று கூறி அதற்குரிய கருவிகளை பொருத்தாமல் விட்டுள்ளார். அவரின் எண்ணப்படியே இன்றுவரை வீடு பூட்டப்படவில்லை.

வீடு தெரு மட்டத்திலிருந்து 8 அடி உயரத்தில் உள்ளது. ஆற்றில் பெரு வெள்ளம் வந்தால் கூட வீட்டின் உயரத்துக்கு வரக்கூடாது என திட்டமிட்டு கட்டியிருக்கிறார்கள். 

ADVERTISEMENT

குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால், வெள்ளநீர் உள்ளே புக முடியாதவாறு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. 

வேங்கடசாமி நாட்டாரின் வாரிசுகள் இந்த வீட்டை பழமை மாறாமல் பராமரித்து வருகின்றனர்.

இவ்வளவு பழைமையான பூட்டப்படாத வீடு தமிழகத்தில் வேறு எங்குமில்லை.

(பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பற்றி  புதல்வர் வே. நடராஜன் எழுதிய புத்தகத்திலிருந்து )

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT