தினமணி கொண்டாட்டம்

சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் "பெயிண்ட்'

நிலா

மாட்டுச் சாணம் சிறந்த கிருமி நாசினி. அதனால்தான், இன்றைக்கும் வீட்டு வாசல்களில் மாட்டுச் சாணத்தை நீரில் கலந்து வாசல் தெளிக்கிறார்கள். மண் வீடுகளின் உள்ளே மாட்டுச் சாணத்தால் பூசி மெழுகும் வழக்கமும் உள்ளது. மாட்டுச் சாணத்தை பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். அதில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாட்டுச் சாணத்தில் இருந்து எரிவாயு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஏற்கெனவே சாணத்தை உரமாகப் பயன்படுத்துவதோடு அதை விபூதி போன்ற பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்; அத்துடன் இப்போது பல்வேறு வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களையும் தயாரிக்கத் துவங்கியுள்ளனர். அப்படி ஒரு புது வரவுதான் மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் "பெயிண்ட்'.

பல்வேறு தேசிய அளவிலான ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றப் பின்னரே இப்பெயிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது . இதற்கு பி. ஐ. எஸ் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் உட்புறம், வெளிப்புறம் இரண்டிலும் பூசக்கூடிய இப்பெயிண்ட் நான்கு மணி நேரத்தில் உலர்ந்து விடும் என்று கூறுகின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வகையில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயிண்ட் கொண்டுள்ளது. இதன்மூலம் கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.55,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் நிதின் கட்கரி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பெயிண்ட் டிஸ்டெம்பர் மற்றும் குழம்பு வடிவத்தில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT