தினமணி கொண்டாட்டம்

கிணற்றுக்குள் விழுந்த நமீதா

17th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

கதாநாயகி, வில்லி, கவர்ச்சி பாடல் என தனது திரைப் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தொட்டவர் நமீதா. இப்போது இவர் தயாரிப்பாளராக உருவாகி இருக்கும் படம் "பௌவ் பௌவ்.'  இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு கதையின் பிரதான கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்கிறார்.  படப்பிடிப்பு அடர்ந்த வனப்பகுதிகளில் அடுத்தடுத்த கட்டங்களாக நடந்து வருகின்றன.  படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று நடித்து வந்த நமீதாவின் செல்போன், ஒரு கட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் மொபைல் விழுவதை தடுக்க பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்தார்.  இதனால் படப்பிடிப்பு தளம் பரபரப்பானது. பின்னர் அனைவரும் சேர்ந்து நமீதாவை காப்பாற்றியுள்ளனர்.  பின்னர் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் நமீதா. இது பற்றி அவர் பேசும் போது...

"" சம்பவம் எதிர்பாராத ஒன்று என்றாலும், படத்தில் அதை வைக்க கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.  அந்த விதத்தில் இது மகிழ்ச்சி'' என்றார் நமீதா. 

ஆர்.எல்.ரவி - மேத்யூ ஸ்கேரியா இரட்டை இயக்குநர்கள் கதை எழுதி இப்படத்தை இயக்குகின்றனர். நமீதாஸ் புரொடக்சன்ஸ்  நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.   கிருஷ்ணா  ஒளிப்பதிவு செய்கிறார். ரெஜிமோன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அனில் கும்பளா செய்திருக்கிறார்.

ADVERTISEMENT

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT