தினமணி கொண்டாட்டம்

முதல் பட வாய்ப்பில் மகிழ்ச்சி

17th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

"பழைய வண்ணாரப்பேட்டை', "திரெளபதி' படங்களின் இயக்குநர் மோகன் ஜி அடுத்து "ருத்ரதாண்டவம்'  என்ற பெயரில் படத்தை இயக்குகிறார். 

இதில் கதாநாயகனாக "திரெளபதி' படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார். மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பரப் படங்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் "குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று வரும்  தர்ஷா குப்தாவிற்கு இப்போது முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.  

சமூகவலைதளங்களில் பரபரப்பாக கருத்துக்களை பதிந்து வரும் இவர், , எப்போதும் கவர்ச்சியாக தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

ADVERTISEMENT

தர்ஷா குப்தா பேசும் போது... 

"ருத்ரதாண்டவம்' படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. "திரௌபதி' வெற்றியை கொடுத்த மோகன் ஜியின் அடுத்தப் படமாக உருவாக இருப்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

அந்தப் படத்தில் நான் கதாநாயகியாக இடம் பிடித்திருப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்  படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருக்கும், என் சினிமா பயணத்தில் முதல் படமே தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட்ட  படைப்பை கொடுத்த, மோகன் ஜியுடன் படத்தில் இருப்பது சந்தோஷம்'' என்று தெரிவித்துள்ளார் தர்ஷாகுப்தா.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT