தினமணி கொண்டாட்டம்

இயற்கை விவசாயத்தில் இறங்கிய பிரபலம்

17th Jan 2021 06:00 AM | கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT

 

கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுபவர்கள் அடுத்தபடியாக கிரிக்கெட் ஆட்டத்தின் போது வர்ணனை செய்யும் வேலையைச் செய்வார்கள். சிலர் தங்களது கிரிக்கெட் அனுபவங்களை நூலாக எழுதுவார்கள். சிலர் அரசியல் கட்சிகளில் சேர்வார்கள். அல்லது கிரிக்கெட் பயிற்சி தரும் பள்ளியைத் தொடங்குவார்கள்.

ஆனால் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ். தோனி கிரிக்கெட் தொடர்பான எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நேராக இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டார். தோனி தோட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளைத் துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முன் வந்திருக்கிறது.

ADVERTISEMENT

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், ஜார்க்கண்டில் தனக்கு சொந்தமாக இருக்கும் நிலங்களில் தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை விளைவிக்க ஆரம்பித்தார்.

ஜார்க்கண்டில் பொதுவாகத் தொழில் நிறுவனங்களைத் தொடங்க தொழில் அதிபர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தோனியோ தனது நிலங்களில் விளையும் காய்கறிகளை ஜார்க்கண்ட் அரசு ஏற்றுமதி செய்வதன் மூலம் அரசாங்கம் தொழிலுக்கு ஆதரவு தருகிறது என்ற நிலைப்பாடு தொழிலதிபர்கள் மத்தியில் உருவாகும். அதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஜார்க்கண்ட் அரசு தோனியின் காய்கறிகளை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளதாம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT