தினமணி கொண்டாட்டம்

உடல் பருமன் உண்டாக்கும் விளைவுகள்

17th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

உடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் வாக்கு. அவ்வகையில் நோய்களுக்கு பல்வேறு காரணம் இருப்பினும் உடல் பருமன் சமீப காலமாக அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும். இதனை பிஎம்ஐ (உடல் பருமனை குறிக்கக்கூடிய குறியீடு) எனும் அளவீட்டால் கணிக்கலாம். சராசரியாக ஆண்கள் 21 முதல் 25 பிஎம்ஐ, பெண்கள் 18 முதல் 23 பிஎம்ஐ கொண்டவர்களாக இருக்கலாம். இந்த அளவை தாண்டினால் அதிக உடல் எடையாக கருதப்படும். பிஎம்ஐ 30 தாண்டினால் உடல் பருமனாக கருதப்படும்.

உலக அளவில் உடல் பருமன் நாளுக்கு நாள் அதிகமாகிறது. உலக மக்கள் தொகையில் 350 மில்லியன் மக்கள் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் உடல் பருமனாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உடல் பருமன் மிக முக்கிய தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம், மூட்டு நோய்கள், பித்தப்பை கல், சிலவகை புற்று நோய்கள் இவற்றிற்கு ஆதாரமாக உள்ளது..

ADVERTISEMENT

சர்வதேச அளவில் சுமார் 550 கோடி மக்கள் உடல் குண்டானவர்கள் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது உலக மக்கள் தொகையில் 76 சதவீதம் ஆகும். குண்டாவதற்கு உடலில் ஏற்படும் அதிக அளவு கொழுப்பே காரணம்.

இதனால் உடல் நலத்திற்குதான் கேடு. போதுமான அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடாததே காரணம். உடல் பருமன் பூமியில் தோன்றியுள்ள புது விதமான தொற்றுநோய் என ஆராய்ச்சியாளர்கள் வர்ணித்துள்ளனர். குண்டாவதால் அடி வயிற்று பகுதியில் அதிக அளவு கொழுப்பு உருவாவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT