தினமணி கொண்டாட்டம்

பண மதிப்பிழப்பின் கதை

DIN

2016 நவம்பர் 8 -ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பின் நடைபெற்ற சம்பவங்களை கொண்டு உருவாகி வரும் படம் "2000'. பிரபல பேச்சாளரும் இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார், அரசியல் விமர்சகர் அய்யநாதன், பெரியார் செயற்பாட்டாளர் ஓவியா, தமிழ் தேசிய சிந்தனையாளர் தியாகு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புதுமுகங்கள் ருத்ரன் பராசு, ஷர்னிகா, மூர்த்தி, பிர்லா போஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ருத்ரன். ஃபீனிக்ஸ் திரைப்படைப்பகம் நிறுவனம் தயாரிக்கிறது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... "" எளிய விவசாயி ஒருவரின் வாழ்க்கையில் பண மாற்று திட்டம் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் திரைக்கதை. பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு மாற்ற முடியாமல் திணறும் ஏழைகள், அவர்களின் வாழ்வியல் பாதிப்பு, புதிய நோட்டுக்கள் ஏற்படுத்தும் பாதிப்பு, அதற்காக நடத்தப்படும் சட்டப் போராட்டம், சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஆகிய உண்மை நிகழ்வுகளைத் தழுவி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம். இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலை சிக்கலாக்குவதும் குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகள், லட்சியவாதிகள் எனப் பெயரிட்டுக் கொண்டவர்களின் மூளைகள்தான்.

அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல் அறிவு தரும் முகமூடிகள்தான் இருப்பதிலேயே குரூரமானவை. அப்படி தங்களது தேவைகளுக்காக அறிவோடு ஆயுதங்களையும் பயன்படுத்தும் சிலரின் கதைகள்தான் படம். அவரவர் செயல்கள்தான், அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என இந்தக் கதையை இப்படியும் சொல்லி விட்டுப் போகலாம்'' என்றார் இயக்குநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT