மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் விரைவில் நீருக்கடியில் ரயில் ஒடவுள்ளது. அதற்கான பணிகள் இந்த ஆண்டுத் தொடங்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹவுரா பாலம் அமைந்துள்ள ஹூக்ளி நதியின் நீருக்கடியில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. இவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் நாட்டின் முதலாவது நீருக்கடியில் செல்லும் மெட்ரோ பாதை என்ற பெருமையைப் பெறும்.