தினமணி கொண்டாட்டம்

புதிய செயலி

3rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

தமிழ் சினிமாவில் "இனிது இனிது காதல் இனிது' படத்தின் மூலம் அறிமுகமானவர்  ஜெய் ஆகாஷ்.  "ரோஜாக்கூட்டம்', "ராம கிருஷ்ணா',  " அடடா என்ன அழகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

தற்போது சின்னத்திரையிலும் தலைகாட்டி முத்திரை பதித்துள்ளார். புகழ்பெற்ற கன்னட மொழி தொடர் "துலா பஹ்ட் ரே". இதனைத் தற்போது "நீதானே என் பொன் வசந்தம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், 40 வயதான பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூர்ய பிரகாசத்திற்கும் காதல் கல்யாணம் தான் கதை. இதில் சூர்ய பிரகாசம் கதாபாத்திரத்தில் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். ஜீ தமிழில் தொலைக்காட்சியில் பிப்ரவரி முதல் இத்தொடர் ஒளிப்பரப்பானதை தொடர்ந்து ஜெய் ஆகாஷிற்கு 450 பெண் ரசிகர் மன்றங்கள் உருவாகி இருக்கின்றன. இவர்கள் ஒன்றுகூடி நட்சத்திர ஓட்டலில் ஜெய் ஆகாஷிற்கு விழா எடுத்திருக்கிறார்கள்.  தமிழ் சினிமா மீது  அக்கறை கொண்டு தற்போது புதிய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார் ஜெய் ஆகாஷ். இது பற்றி அவரிடம் கேட்ட போது சொன்னார்:

""அ ஸ்ரீன்க்ஷங் ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும்.. இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாகத் தரவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். 

ADVERTISEMENT

நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 24 மணி நேரமும்  இந்த ஆப்பில் படம் பார்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம். பல புதிய படங்கள் இந்த ஆப்பில் அடுத்து வெளியாகும். வேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த அ ஸ்ரீன்க்ஷங் ஆப்பில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.  நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடும். ஆனால் இந்த அ ஸ்ரீன்க்ஷங் ஆப்பில் நீங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் பார்க்க முடியும். அனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச்சிறந்த ஆப்பாக இது  இருக்கும்'' என்றார் ஜெய் ஆகாஷ். இவர் இயக்கி நடித்துள்ள "முன்னாள் காதலி', "அடங்காத காளை, "புதிய மனிதன்' படங்கள் விரைவில் தமிழில் வெளியாக உள்ளன. 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT