தினமணி கொண்டாட்டம்

பூனைக்கு மவுசு 

3rd Jan 2021 06:00 AM | -ஜெ

ADVERTISEMENT

 


நாய்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவை பூனைகள்.

பூனைகள் ஒரு தூங்குமூஞ்சி. அவற்றின் வாழ்நாளில் 70 சதவீதம் தூக்கத்தில்தான் செலவிடுகின்றன.

மனிதர்களுக்கு தோல் வழியாக வியர்வை வெளியேறுவது போல, பூனைகள் தங்கள் உள்ளங்கால்கள் மூலம் வியர்வையை வெளியேற்றுகின்றன.

ADVERTISEMENT

நல்ல தண்ணீர் பிரச்னை பூனைகளுக்கு இல்லவே இல்லை. ஏனெனில் கடல் நீரில் உள்ள உப்பை சுத்தகரிக்கும் தன்மை, பூனைகளின் சிறுநீரகங்களுக்கு உண்டு.

பூனைகளின் சிறுநீருக்கு இருட்டில் ஒளிரும் தன்மை உண்டு. இதனைக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்தை பூனை சரியாக கணித்துக் கொள்ளும்.

உணவு விஷயத்தில் பூனைகள் ஒரு சந்தேகப் பிராணி. அவை ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிட்டு சோதனை செய்த பின்னரே, முழுமையாக உணவை உண்ணத் துவங்கும்.

மனிதர்களுக்கு இடது, வலது கை இருப்பது போல பெண் பூனைகளுக்கு வலது கால் பழக்கமும், ஆண் பூனைகளுக்கு இடது கால் பழக்கமும் இருக்கும். 

ரஷ்ய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு பேர், பூனை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பூனைகள் வைத்திருப்பவர்கள் தனியாகப் பதிவு செய்திருக்க வேண்டும், பூனைகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கிறது. எஜமானர்களுடன் வெளியே செல்லும்போது உரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. பூனை வளர்ப்பை அதிகரிக்க ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேசப் பூனைக் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்தக் கண்காட்சியில், ரஷ்யா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உயர் ரக பூனைகள் இடம்பெற்றன. 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT