தினமணி கொண்டாட்டம்

இந்திய மொழிகளில் "தி மார்க்ஸ்மேன்'

DIN

ஹாலிவுட் சினிமாவில்  சமீபத்திய கவன ஈர்ப்பு  "தி மார்க்ஸ்மேன்'.  ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது. 

கைபா நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்தவர்  டெல் கே கணேசன். இவர் ஹாலிவுட் சினிமாவில் முத்திரை பதிக்கும் தமிழராக திகழ்ந்து வருகிறார்.  முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் படமான லியாம் நீசனின் "தி மார்க்ஸ்மேன்' படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.  செலிப்ரிட்டி ஃபிலிம் இண்டெர்நேஷனல் மற்றும் யூ எஃப் ஓ மூவிஸூடன் இணைந்து டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸ் இப்படத்தை கடந்த 26 -ஆம் தேதி வெளியிட்டுள்ளது.  

ராபர்ட் லோரென்ஸ் இயக்கியுள்ள இப்படம், பண்ணை உரிமையாளரான 60-வயது லியாம் நீசன், தாயை இழந்த 11 வயது சிறுவனை மெக்சிகோவின் போதை மருந்து கும்பலிடம் இருந்து எப்படி காக்கிறார் என்பதை விறுவிறுப்பான முறையில் அதிரடியாக விவரிக்கிறது. "" இது ஒரு மிகச் சிறந்த படம் என்பதால், மொழிகளை கடந்து ரசிகர்கள் பெரியளவில் ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார் டெல் கணேசன்.  கைபா ஃபிலிம்ஸின் அஷ்வின் டி கணேசன் கூறுகையில், ""தனது முந்தைய படங்களின் வெற்றியின் காரணமாக லியாம் நீசன் உலகெங்கும் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார். அவரது புதிய படத்தை இந்திய ரசிகர்களுக்கு விருந்தாகப் படைப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ காட்சிக்குச் சென்றுள்ள பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT