தினமணி கொண்டாட்டம்

காதலியை மீட்கும் காதலன்

DIN


ஒரு பணக்கார இளைஞன் அமெரிக்காவில் சென்று நிரந்தரமாக குடியேற வேண்டும் என்ற லட்சியத்தை வைத்துள்ளான். 

இதற்கிடையில்  ஒரு கர்நாடக இசை குடும்பத்தை சார்ந்த பெண்ணைக் காதலிக்கிறான். மகனின் காதலை பற்றித் தெரிந்த இளைஞனின் தந்தை அவர்களின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார். இந்த நிலையில் இசைக் கச்சேரிக்காக தனது தாயுடன் கோவா செல்லும் காதலி, அங்கு  கடத்தப்படுகிறார். காதலன் தனது காதலியை  கடத்தல் கும்பலிடமிருந்து கண்டு
பிடிக்க முயல்கிறார். அப்போது நடக்கும் பரபர சம்பவங்களே கதை. படத்தின் பெயர் "நின்று கொல்வான்'. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாகி வரும் இப்படத்தை  வி. பி.  சங்கர் எழுதி இயக்குகிறார்.   அர்ஜூன் சந்த்ரா, கருணா டோக்ரா, யோகி பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி,  கீதா, "நிழல்கள்' ரவி, ராஜீவ்  உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். 

ஜூடா சாண்டி இசையமைக்கிறார்.  விஜய், "பயர்' கார்த்தி இருவரும் சண்டை பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். 

என்.எம்.விஸ்வா  படத்தொகுப்பை கவனிக்கிறார்.  சென்னை, கோவா, உடுப்பி, பெங்களூர், மைசூர், மடிகேரி, குசால்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்படிப்பு நடந்துள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.  படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT