தினமணி கொண்டாட்டம்

பெண்மை பேசும் படம்

DIN

முக்குழி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "குழலி'.  "காக்கா முட்டை' விக்னேஷ்,  ஆரா நடிக்கின்றனர்.  இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஊர்வசி, இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  படத்தின் இயக்குநர் செரா .கலையரசன் பேசும் போது....

""சமூக அக்கறை உள்ள படங்களை மட்டுமே இயக்க வந்துள்ளேன். பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் படங்களை நான் எடுக்க வரவில்லை . இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவன், அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் சந்தித்த ஒரு பெண், அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் புனைவு, சினிமாவின் வியாபாரத்துக்கான சமரசங்கள் எல்லாமும் இந்தக் கதை. வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம்.'' என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT