தினமணி கொண்டாட்டம்

சென்னையில் சாதனை

சுஜித்குமார்

இந்திய கிரிக்கெட்டின் சாதனைகளின் நாயகன் ரோஹித் சர்மா மேலும் 6 புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் ரோஹித் சர்மா இச்சாதனைகளை படைத்தார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் பிறந்த ரோஹித் சர்மா (33)  ஒரு நாள், டி20 ஆட்டங்களில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர். தொடக்க வீரராக களமிறங்கும் அவரது அதிரடி ஆட்டத்துக்கு எதிரணி பந்துவீச்சாளர்கள் சற்று தயக்கத்துடனே பந்து வீசுவது வழக்கம்.

ஐ.சி.சி பேட்டிங் தர வரிசையில் ஒரு நாள் ஆட்டத்தில் 2-ஆவது இடத்திலும், டி20-இல் 14-ஆவது இடத்திலும், டெஸ்ட் ஆட்டத்தில் 23-ஆவது இடத்திலும் உள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தரமாக இடம் பெறாத நிலையில் ரோஹித் உள்ளார். 

இந்நிலையில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இந்திய அணி-உலக சாம்பியன் இங்கிலாந்துடன் டெஸ்ட்,  ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது.

முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றன. முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா முதலிரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 6, 12 ரன்களை மட்டுமே சேர்த்து அவுட்டானார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பிப். 13 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது.

6 புதிய சாதனைகள்: இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 161 ரன்களை விளாசினார். அவரது 161 ரன்களில் (231) 18 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் இடம் பெற்றன.

முதல் சாதனை: சொந்த மண்ணில் 7 டெஸ்ட் சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் 6 சதங்களை அடித்திருந்தார்.

இரண்டாவது சாதனை: கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 

106 இன்னிங்ஸ்களில் 19 சதங்களை குவித்தார். விராட் கோலி 120 இன்னிங்ஸ்களில் 18 சதங்கள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 122 இன்னிங்ஸ்களில் 13 சதங்களை விளாசியுள்ளன மூன்றாவது சாதனை: சர்வதேச கிரிக்கெட்டின் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான ஆட்டங்களிலும், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என வெவ்வேறு 4 நாடுகளின் அணிகளுக்கு எதிராக சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை ரோஹித் வசம் சென்றது.

நான்காவது சாதனை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சாதனைகள் அடித்த இரண்டாவது வீரர் என்ற கூட்டுச் சாதனையை நிகழ்த்தினார். 

முதல் வீரர் சாதனை ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுச்சேன் 5 சதங்கள் வசம் உள்ளது. 4 சதங்களை ரோஹித் சர்மாவுடன், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸமும் பகிர்ந்துள்ளார்.

ஐந்தாவது சாதனை: சொந்த மண்ணில் துரிதமாக 200 சர்வதேச சிக்ஸர்களை விளாசியவர் என்ற 5-ஆவது சாதனையை நிகழ்த்தினார். 

123 இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்களையும், நியூஸிலாந்து வீரர் கப்டில் 161 இன்னிங்ஸ்களிலும், மெக்கல்லம் 192 இன்னிங்ஸ்களிலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ஆறாவது சாதனை: சொந்த மண்ணில் 118-ஆவது ஆட்டத்தில் 200 சர்வதேச சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார் ரோஹித். 

202 ஆட்டங்களில் 179 சிக்ஸர்களுடன் தோனி இரண்டாவது இடத்திலும், 146 ஆட்டங்களில் 111 சிக்ஸர்களுடன் யுவராஜ் சிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT