வேதாத்திரி மகரிஷி சொற்பொழிவு ஒன்றில் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி உறவின் சிறப்பைப் பற்றி பல உதாரணங்களுடன் பேசினார். இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து "விட்டுக் கொடுப்பது என்று பொதுவாகத்தான் சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்னை அங்குதான் ஆரம்பிக்கிறது' என்றார்.
அதற்கு வேதாத்திரி மகரிஷி "யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ? யார் அறிவாளியோ? அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்து போவர்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள். இனி உங்கள் வீட்டில் யார் விட்டுக் கொடுத்துப் போவது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' என்றார்.
"உங்கள் அறிவுரை அமுதானது' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் அந்த பெண்.