தினமணி கொண்டாட்டம்

மாலத்தீவில் தமிழருக்கு  அங்கீகாரம்!

14th Feb 2021 06:00 AM | -கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT

 

மாலத்தீவைப் பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகம். மாலத்தீவு முழுக்க முழுக்கச் சுற்றுலா மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. மாலத்தீவுகளில் அங்குப் பிறந்து வாழும் குடிமக்களைத் தவிர இலங்கைத் தமிழர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும், கேரளத்தவர்களும் வேலை நிமித்தம் வசிக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின் "கென்டகி' மாநிலத்தின் கெvரவம் மிகுந்த விருது "கென்டகி கர்னல்' என அழைக்கப்படுகிறது. மாலத்தீவிற்கு நெதர்லாந்து நாட்டின் துணைத் தூதுவராகத் தனது குடிமகனை அல்லது குடிமக்களை நியமனம் செய்யாமல் கெvரவ துணைநிலை துணைத் தூதராக ஹிம்மத் அஹ்மத் ஹூûஸனை நியமித்தது. பொது மக்களுக்குச் சேவைகள் புரியும் சிலரை அங்கீகரிக்கும் விதமாக இது போன்று கெvரவ நியமனங்களைப் பல நாடுகள் செய்வதுண்டு. தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூûஸனுக்கு "கென்டகி' மாநிலத்தின் ஆளுநரான ஆண்டி பெஷியர் "கென்டகி கர்னல்' விருதினை வழங்கி அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழிலும் உறுதி செய்துள்ளார்.

""ஒருவர் சமூகம், மாநிலம் அல்லது நாட்டிற்குச் செய்திருக்கும் சேவைகள், உழைப்பு, பங்களிப்பு, செய்த சாதனைகளை மதிப்பீடு செய்து அவரை அங்கீகரிக்கும் விதமாக "கென்டகி கர்னல்' விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெற கெண்டகி மாநிலத்தில் பிறந்தவராகவோ அல்லது அமெரிக்க நாட்டில் பிறந்தவராவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த நாட்டின் குடிமகனுக்கும் இந்த விருது வழங்கப்படலாம்.

ADVERTISEMENT

அந்தத் தனிநபர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அனைவரும் பாராட்டும் விதத்தில் செய்திருக்க வேண்டும்.

"கென்டகி கர்னல்' விருது கிடைக்கப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ரொனால்டு ரீகன், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், குத்துச்சண்டையில் சாதனை புரிந்த வீரர் முகம்மது அலி. இந்தப் பட்டியலில் இப்போது நானும் சேர்ந்திருக்கிறேன் என்கிறார் மாலத்தீவில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹிம்மத் அஹ்மத் ஹூûஸன்.

ஹிம்மத் அஹ்மத் ஹூசைன் யார்? அவர் செய்த சேவைகள் என்ன ? எதற்காக அவருக்குக் "கென்டகி கர்னல்' விருது வழங்கப்பட்டுள்ளது?

""தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி புதூர் கடை என்ற ஊர் தான் எனக்குச் சொந்த ஊர். மாலத் தீவுகளில் வசிக்கும் இந்தியர்களில் குறிப்பாகத் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு, மாலத் தீவு, இந்திய அரசுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்துப் பணியாற்றி நட்பு பாலமாக இருந்து வருகிறேன். தொழிலாளர் பிரச்னைகளை மாலத்தீவு அரசு அதிகாரிகளுடன் பேசித் தீர்த்து வைத்துள்ளேன். தவிர நெதர்லாந்து நாட்டின் விமானச் சேவை நிறுவனமான கே. எல். நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்திக் காட்டினேன். எனது செயல்பாடுகளைத் தர நிர்ணயம் செய்து நெதர்லாந்து நாடு தனது சார்பாக என்னை கெvரவ துணை நிலை துணைத்தூதராக' நியமித்தது. அதனால் நெதர்லாந்து நாட்டிற்கும் மாலத்தீவிற்கும் இன்னொரு நட்புப் பாலம் உருவாகக் காரணமாக இருக்க முடிந்தது.

சுனாமி தாக்கத்தில் மாலத்தீவில் சில தீவுகள் பாதிக்கப்பட்டன. நெதர்லாந்து நாட்டிலிருந்து கணிசமான தொகையை உதவித் தொகையாக மாலத்தீவிற்குப் பெற்றுத்தந்தேன்.

கரோனா காலத்தில் மாலத்தீவில் சிக்கித் தவித்த தமிழக மக்களுக்கும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகளுடன் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுத் தந்தேன். மாலத் தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் படிக்கவும் வழிவகைச் செய்துள்ளேன். விமானப் பயணிகள் சேவையில் கல்வி அறிவும், பல ஆண்டுகள் அனுபவமும் இருப்பதனால் மாலத்தீவில் அனைவரும் பாராட்டும்படி செயல்பட முடிந்தது'' என்கிறார் ஹிம்மத்.

ADVERTISEMENT
ADVERTISEMENT