தினமணி கொண்டாட்டம்

யோகிபாபுவின் "பொம்மை நாயகி'

14th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT

 

தனது தயாரிப்புகளில் எப்போதுமே தனித்துவம் காட்டுபவர் இயக்குநர் பா. ரஞ்சித். தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார்.

"பரியேறும் பெருமாள்', "இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு'  ஆகிய படங்களின் வெற்றியினைத் தொடர்ந்து "ரைட்டர்" படத்தைத்  தயாரித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் "பொம்மை நாயகி' என்ற படத்தையும் தயாரிக்கிறார் பா. ரஞ்சித். 

இப்படத்தை  யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரொடக்ஷன்ஸ்.  அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி,  ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களாக நடந்து வருகின்றன.  ஒளிப்பதிவு- அதிசயராஜ்.  இசை- சுந்தரமூர்த்தி.  படத்தொகுப்பாளர் - செல்வா.   கலை - ஜெயரகு .  பாடல்கள்- கபிலன்,  அறிவு.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT