தினமணி கொண்டாட்டம்

கோட்டை முனி 

DIN

ட்ரீம் லைட் பிக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வரும் படம் "கோட்டைமுனி'. ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். 1980 காலகட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் அரசனாக வாழ்ந்த கோட்டை முனி என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இலங்கை தனுஷ்கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி கேங்க்ஸ்டர் படமாக இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர். கே. சுரேஷ் கோட்டை முனியாக நடிக்கிறார். "வத்திக்குச்சி', "காலா' படத்தில் நடித்த திலீபன் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்கிறார். அருந்ததி நாயர், ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடலும் கடல் சார்ந்த பகுதிகளில் நடக்கும் கதை என்பதால், இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டினம் ஆகிய கடற்கரைப் பகுதியில் நடக்கிறது. ஒளிப்பதிவு - கார்த்திகேயன், இசை: பாண்டியன், கலை: எஸ். கே, படத்தொகுப்பு: நெல்சன் ஆண்டனி. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT