தினமணி கொண்டாட்டம்

கணவருக்கு கோயில்

22nd Aug 2021 06:00 AM

ADVERTISEMENT

 

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே விவசாயம் செய்து வந்த தம்பதி அங்கி ரெட்டி-பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் நடந்த கார் விபத்தில் சிக்கி கணவர் அங்கி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த பின் விவசாய பணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்துள்ளார்.

கணவனின் நினைவாகவே இருந்த மனைவி பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர், தனக்கு கோயில் கட்ட சொன்னதாக கூறப்படுகிறது. கணவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகனிடம் கூறியுள்ளார் தாய் பத்மாவதி. மகனும் தாயின் விருப்படியே விவசாய நிலத்தில் மறைந்த தந்தையின் சிலையை நிறுவி கோயில் கட்டி கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தினமும் கணவரின் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் மனைவி பத்மாவதி, கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT