தினமணி கொண்டாட்டம்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார்

22nd Aug 2021 06:00 AM

ADVERTISEMENT

 

"வல்லக்கோட்டை' ,"ராஜவம்சம்' , "கோடியில் ஒருவன்' உள்ளிட்ட  படங்களை தயாரித்துள்ள செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்து தயாரிக்கவுள்ள படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை "கழுகு' படத்தை இயக்கிய சத்ய சிவா எழுதி இயக்குகிறார்.  இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்ரியா நடிக்கிறார். இவர்களுடன் விக்ராந்த் , துளசி , மதுசூதனன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்  ராஜா பட்டசார்ஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் கே எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் . கலை- இயக்கம் சி .உதயகுமார் , சண்டைப்பயிற்சி மகேஷ் .இப்படத்தின் தலைப்பு , படப்பிடிப்பு மற்றும்  இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT