தினமணி கொண்டாட்டம்

அதிசய பழங்கள்

22nd Aug 2021 06:00 AM

ADVERTISEMENT

 


பிஜின்-ஹைம் ஸ்ட்ராபெரி 

இந்த ஸ்ட்ராபெரி வகைகள் மற்ற ஸ்ட்ராபெரி வகைகளை விட கொஞ்சம் பெரியது. இது ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு பருவத்தில் 500 மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இது சந்தையில் ஒரு ஸ்ட்ராபெரி 4000 டாலருக்கு விற்கப்படுகிறது. நம்முடைய தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் 29500 ரூபாய்.

நார்தேர்ன் டெரிட்டோரி மேங்கோஸ் 

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் இந்த மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழங்கள் அதிக விலை உயர்ந்த பழங்களாக இருப்பதற்கு காரணம் அதிக அளவில் விளைவிக்கப்படாமல் இருப்பது.  இந்த ஆஸ்திரேலிய மாம்பழம் ஒன்றின் விலை 4116 டாலர்கள். நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3 லட்சம்.


கார்ன்வால் பைனாப்பிள் 

இந்த அன்னாசிப்பழம் மிக வித்தியாசமான முறையில் வளர்க்கப்படுகிறது.  மிக மிக குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. இந்த அன்னாசிப்பழம் ஒன்றின் விலை 1,600 டாலர்கள். நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பில் 118000 ரூபாய்.


ரூபி ரோமன் கிரேப்ஸ் 

இந்த திராட்சை இனத்தின் சிறப்பு என்னவென்றால் அதிக சர்க்கரை உள்ளடக்கமும், குறைந்த அமிலத்தன்மையும் கொண்டதாம். இது உலகின் மிகப் பழமையான திராட்சை வகைகளில் ஒன்று என கூறப்படுகிறது. இந்த திராட்சை ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திராட்சை ஒன்றின் விலை 400 டாலர்கள். தற்போதைய இந்திய மதிப்பில் 29000 ரூபாய். 


டென்சுக்  தர்பூசணி

டென்சுக் தர்பூசணி சராசரி தர்பூசணியை விட மிக அதிக அளவில் சுவை கொண்டதாக இருக்குமாம்.  ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடக்கூடிய இந்த விலை உயர்ந்த பழங்களை வாங்குவதற்கு ஒரு கூட்டம் எப்பொழுதும் தயாராகவே இருக்குமாம். இதன் விலை எவ்வளவு தெரியுமா ஒரு தர்பூசணிக்கு 250 டாலர்கள். நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பில் 18000 ரூபாய்.


யூபரி கிங் மெலன் 

இந்த அதிக விலை கொண்ட முலாம்பழம் வித்தியாசமான இனிப்பு சுவை கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த அதிக விலை கொண்ட முலாம்பழம் ஜப்பானின் ஹொக்கைடோவில் வளர்க்கப்படுகிறது. இந்த முலாம்பழம் ஒன்றின் விலை என்ன தெரியுமா? 200 டாலர்கள். நம்முடைய இந்திய மதிப்பில் 14000 ரூபாய்.


சதுர தர்பூசணி

நம்முடைய நாட்டில் வரக்கூடிய நாம் பொதுவாக வாங்கக்கூடிய தர்பூசணிகள் எல்லாம் உருண்டை வடிவில் காணப்படும்.  இது விலை உயர்ந்ததாக இருக்க காரணம் இதனுடைய வடிவம். சதுர வடிவில் இதை உற்பத்தி செய்து எடுப்பதற்கு அதிக உழைப்பு தேவைப்படுவதால் விலையும் அதிகமாக இருக்கிறது. ஒரு சதுர தர்பூசணியின் விலை 200 டாலர்கள். நம்முடைய இந்திய மதிப்பில் 14000 ரூபாய்.


சேகாய்-இச்சி ஆப்பிள் 

இந்த ஆப்பிள் ஒன்றின் விலை 21 டாலர்கள். இந்திய மதிப்பில் 1500 ரூபாய். ஜப்பானில் விற்கப்படக்கூடிய இந்த ஆப்பிள் இவ்வளவு விலை போக காரணம் இதனுடைய வித்தியாசமான செயல்முறை. இந்த ஆப்பிள் தேனில் மூழ்க வைத்து எடுக்கப்பட்டு வித்தியாசமான வழிமுறைகள் மூலம் அதனுடைய சுவை கூட்டப்படுகிறது. வித்தியாசமான சுவையை கொடுப்பதன் காரணமாக இதனுடைய விலையும் அதிகமாக இருக்கிறது. 


டெக்கோபன் சிட்ரஸ் 

இந்த ஆரஞ்சு ஒன்றின் விலை 13 டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 950 ரூபாய். இது விதைகள் அற்ற மிகவும் இனிப்பு சுவை கொண்ட ஒரு ஆரஞ்சு வகை. இது கியோமி மற்றும் போங்கன் ஆகியவற்றுக்கிடையிலான ஒரு கலப்பினம். இதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் இதன் சுவையும் வித்தியாசமாக அற்புதமாக இருக்குமாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT