தினமணி கொண்டாட்டம்

வெற்றிமாறனின் புது முயற்சி

25th Apr 2021 07:50 PM

ADVERTISEMENT


"பொல்லாதவன்', "ஆடுகளம்', "விசாரணை', "வடசென்னை', "அசுரன்'என வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் முன்னணி இயக்குநராக திகழ்பவர் வெற்றிமாறன்.  சினிமா சார்ந்து இவர் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்பை தொடங்கி உள்ளார். நலிந்த முதல் தலைமுறை பட்டதாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு உணவு இருப்பிடத்துடன் ஓராண்டு இலவச சினிமா பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இந்த சினிமா பயிற்சி வகுப்பிற்கு பேராசிரியர் ராஜநாயகம் பயிற்சி தர இருக்கிறார். அவர் பேசும் போது...""  சினிமாவுடன் சமூக அறிவியல், ஆங்கிலம், தமிழ், கலாசாரம், இலக்கியம் ஆகியவை இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படும். ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள், சமூக பொருளாதார ரீதியாக நலிந்த முதல்தலைமுறை பட்டாதாரிகள் விண்ணப்பம் செய்யலாம். மாவட்டத்துக்கு ஒரு மாணவர் என தமிழகம் முழுக்க 35 முதல் 40 மாணவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு இலவசமாக சினிமா பயிற்சி வழங்கப்படும்'' என அவர் கூறினார்.

சமீப கால படங்களில் சாதி தொடர்பான பேச்சுகள் அதிகமாக உள்ளதே என வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ""எல்லோருக்கும் எல்லா  வகையான கதைகளையும் சொல்ல உரிமை உண்டு. ஆனால் இயக்குநர்கள் சமூக பொறுப்போடு செயல்பட வேண்டும்'' என்று பேசினார்.

Tags : வெற்றிமாறனின் புது முயற்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT