தினமணி கொண்டாட்டம்

வேதாந்த தேசிகரின் வாழ்க்கை படம்

25th Apr 2021 07:46 PM

ADVERTISEMENT

 

பாரம்பரியம் மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் முக்தா பிலிம்ஸ்.  "நாயகன்', "பொல்லாதவன்'  உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள இந்த நிறுவனம்,  தற்போது "வேதாந்த தேசிகர்' என்ற வராலாற்று பின்புலம் கொண்ட படத்தைத் தயாரித்து வருகிறது.

ஆன்மிக மகான்களில் தனித்துவமானவர் வேதாந்த தேசிகர். அவரது அறம் சார்ந்த ஆன்மிக சேவையை, வாழ்வை யாருமே இதுவரை படத்தில் பதிவு செய்யவில்லை. அதை முதல்முறையாக முக்தா பிலிம்ஸ் செய்துள்ளது.   முக்தா சீனிவாசனின் மகன் முக்தா சுந்தர்  இயக்கி இருப்பதோடு படத்தின் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

வேதாந்த தேசிகராக ஆராய்ச்சியாளரும், உபன்யாசரும் ஆன துஷ்யந்த் ஸ்ரீதர் திரைக்கதை எழுதி  நடித்துள்ளார். இவர் வேதாந்த தேசிகரின் வாழ்க்கைக் குறிப்புகளை திறம்பட ஆய்ந்தவர். மேலும் இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியான பிராகிருத மொழியை இப்படத்தில் பயன்படுத்தவும் செய்திருக்கிறார். துருக்கியர்களின் படையெடுப்பில் இருந்த ஸ்ரீரங்கம் கோயிலை எப்படி வேதாந்த தேசிகர் காத்து நின்றார் என்பதே இப்படத்தின் திரைக்கதை.  துஷ்யந்த் ஸ்ரீதர்,  ஸ்ருதி பிரியா, ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இசையமைக்கிறார்.  ஆன்மிகம் விரும்பும் பெரியவர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் கரோனா தொற்றுப்பரவல் காரணமாக சிறு சிக்கல் இருப்பதால் இப்படம் நேரடியாக முக்தா பிலிம்ஸ் ஓ.டி.டி தளத்தில்  வெளியாகிறது. இனி தொடர்ந்து முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களையும்  இந்த ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது முக்தா பிலிம்ஸ்.

Tags : வேதாந்த தேசிகரின் வாழ்க்கை படம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT