தினமணி கொண்டாட்டம்

சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் 

27th Sep 2020 06:00 AM

ADVERTISEMENT


அஜித்தின் 61 - ஆவது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அஜித்தின் அடுத்தப் படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சுட்டுரையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷிடம்,  அஜித் - சுதா கொங்கரா படத்தில் நடிப்பாரா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குப் பதிலளித்த ஜிவி பிரகாஷ், “"செம்ம கதை அது. நடந்தது என்றால் சிறப்பாக இருக்கும். முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் அது. சுதா அந்தக் கதையை என்னிடம் சொல்லி இருக்கிறார்'” என தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT