தினமணி கொண்டாட்டம்

பற்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி

25th Oct 2020 06:00 AM | திவ்யா அன்புமணி,

ADVERTISEMENT


அன்றாடம் காலை, மாலை என இரு வேளைகள் பல் துலக்குவது நமது பற்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி என்கிறார் டாக்டர் கே.எஸ். ஜி. ஏ. நாசர். இவர் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவமனையின் பல் துலக்க வேண்டிய அவசியம்?

தினந்தோறும் பல் துலக்குவதற்கான காரணங்கள் மூன்று உள்ளன. நாம் உண்ணும் உணவிலுள்ள பொருட்கள் எளிதில் பற்களில் தங்கிவிடும். இதனை அகற்றுவதற்காகப் பற்களைத் துலக்க வேண்டும். ஈறுகளில் ரத்தம் வராமல் தடுப்பதற்காகவும் பல் துலக்க வேண்டும். பல் துலக்கும் போது பற்களையும், ஈறையும் சேர்த்து மசாஜ் செய்வது போல துலக்க வேண்டும். இது மிகவும் அவசியம். நாக்கை சுத்தப்படுத்துவதற்காகவும் பல் துலக்குகிறோம். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாக்கின் மேல் எபிதீலியம் -என்கிற மேல்திசு தினசரி எடுக்க, எடுக்க கழன்று வரும். நாக்கில் அது வெள்ளையாகப் படியும். அதை அகற்ற வேண்டும். ப்ரஷ் மூலமும் இதை அகற்றலாம். அகற்றாவிட்டால் வாய்நாற்றம் ஏற்படும்.

எப்பொழுதெல்லாம் பல் துலக்கலாம்?

காலையில் பல் துலக்குவது அவசியமானது. இரவில் படுக்கைக்கு போகும் முன்பு பல் துலக்குவது மிக மிக அவசியமாகும்.

ADVERTISEMENT

ஏனென்றால் பகல் முழுவதும் நாம் சாப்பிடும் உணவு மற்றும் திண்பண்டங்கள் சில பற்களில் ஒட்டியிருக்கும். இரவில் நாம் தூங்கும் போது வாய் மூடியிருக்கும். அப்போது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நமது பற்களில் ஒட்டியிருக்கும். உணவைச் சாப்பிடும் பொழுது நமது பற்களில் சேதம் ஏற்படும். அதைத் தவிர்க்க இரவிலும் படுக்கும் முன்பு பல் துலக்குவது கட்டாயமாகிறது.காலை-இரவு இருவேளைகளிலும் பல் துலக்குபவர்களின் பற்களுக்கு எந்தச்சேதமும் வருவதில்லை.முதல்வராக (2006-2014) பணியாற்றியவர். பல் பாதுகாப்பு குறித்து இவரது ஆலோசனைகள் இதோ:

பல்லில் சொத்தை ஏற்படுவது ஏன்?

நமது உணவில் நார்ச்சத்துகள் நிறைந்து இருந்தால் எந்த உபாதைகளும் இல்லை. ஆனால் சாக்லெட் போன்றவற்றைச் சாப்பிடும் போது அவை பல்லில் தங்கிவிடும். பல்லின் மேல் பகுதியில் "கிரவுன்' எனப்படும் குப்பி இருக்கும். அடுத்தப் பகுதி ரூட்-வேர். இந்தக் குப்பியின் வெளிப்பக்கத்தில் எனாமல் இருக்கும். அந்த எனாமல் கீழே தந்தினி வரும். தந்தினி தான் பல்லின் நடுத்திசு. இதற்கு கீழ் பற்கூழ் என்னும் நரம்பு இருக்கும். ரத்தக்குழாய்கள் இருக்கும்.

சாக்லெட் போன்றவற்றின் துகள்கள் 20 நாள்கள் வரை பல்லின் மேல்புறத்தில் தங்கிவிட்டால் அது எனாமலைப் பாதித்து, கீழே இருக்கிற தந்தினியையும் பாதிக்கும். இந்த நிலையில் பல் வலியோ, கூச்சமோ ஏற்படாது. அதற்கும் கீழே இருக்கும் "பல்ப்' பில் அதாவது பற்கூழைத் தாக்கும் போது பல்வலி கூச்சம் ஏற்படுகிறது. பல்லில் கருமையாக இருக்கும் போதே கண்டுபிடித்து நீக்கிவிட்டு, அடைத்தால் பல்லைப் பாதுகாத்துவிடலாம். பற்கூழ்வரைச் சென்றுவிட்டால் ரூட் கனால் வரை சென்றுவிடும்.

பற்கள் உடைந்தால்?

பால் பற்கள் விழுந்து, நிலையான பற்கள் முளைத்த பிறகு விழுந்தாலோ, உடைந்தாலோ மீண்டும் முளைக்காது. பொதுவாக பெற்றோர் பற்கள் பெரிது பெரிதாக இருக்கிறதே என்று கவலைப்படுவார்கள். கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம் சிறு வயதில் உருவான நிலையான பற்களின் அளவுதான் வளர்ந்த நிலையிலும் இருக்கும். ஒருவருக்கு எலும்புகள் வளரும். பற்கள் வளராது. பற்கள் கடவுள் கொடுத்தது. அதைப் பாதுகாப்பது அவசியம். போலியாக பற்கள் கட்டலாம். அவை நிஜப்பல் ஆகாது.

பல் வரிசை ஒழுங்கற்று இருப்பது ஏன்?

ஈறு-பல் வரிசை என்பது தாய் தந்தையரின் ஜீனைப் பொறுத்து அமையும். ஒரு குழந்தைக்கு தந்தையின் ஜீன் தாக்கம் இருந்தால் தாடையும் பற்களும் ஒழுங்காக இருக்கும். அதே போல் தான் தாயின் ஜீன் தாக்கம் இருந்து தாடையும் பற்களும் அமைந்திருந்தால் சீராக அமையும். தந்தையின் தாடை அமைந்து அது சிறிதாகவும் இருந்து -தாயின் ஜீன் படி பற்கள் பெரிதாக அமைந்துவிட்டால் இடமின்மையால் பல் மேலே முளைத்துவிடும். இது போன்ற பற்களை சிறு வயதிலேயே கண்டறிந்து மருத்துவரிடம் சென்றால் கிளிப் போட்டு ஆரம்பத்திலேயே சரி செய்து விடலாம்.

எந்த பசை சிறந்தது?

பற்பசைகள் பல வந்துவிட்டன. உங்களுக்கு எந்த பற்பசைப் பிடிக்கிறதோ அந்தப் பற்பசையை உபயோகிக்கலாம். ஆனால் அடிக்கடி பற்பசையை மாற்றுவது உகந்ததல்ல. பற்பசை என்பது லூப்ரிகேன்ட்தான்!

கறையும்-பற்காரையும் ஒன்றா?

கறை வேறு-பற்காரை வேறு. கறை என்பது வெற்றிலைப்பாக்கு, புகைப்பிடித்தல் பான் வகைகளை உபயோகிப்பதால் ஏற்படுவது. காரை என்பது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் ஏற்படுவது. இவை பற்களைச் சரியான முறையில் துலக்காததால் ஏற்படுவதாகும். பற்காரைகளை அகற்றுவதால் பற்கள் ஆட்டம் கண்டு விழுந்துவிடும் என்பது தவறான கருத்து. அப்படியெல்லாம் விழாது.

பொதுவாக பல் உபாதைகள் என்பது என்ன?

இரண்டே இரண்டுதான். ஒன்று பல் சொத்தை- மற்றொன்று ஈறு அழற்சி. ஈறு அழற்சி என்பது பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் காரை இருக்கும். இந்த காரையை எடுப்பதற்கு- பல் துலக்குகையில் மேல் ஈறு தொடங்கி கீழ் நோக்கியும், கீழ் ஈறு தொடங்கி மேல் நோக்கியும், மசாஜ் செய்வது போல துலக்கினால் நோய்களைத் தடுத்துவிடலாம்.

நமது முன்னோர்கள் பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி, வேப்பங்குச்சி போன்ற பொருட்களைப் பயன்படுத்தினார்கள். அவர்களுக்குப் பற்களில் எந்தப்
பாதிப்பு ம் ஏற்படுத்தவில்லையே?

உண்மைதான். அவற்றின் அடிப்படையில் உருவானது தான் டூத் பிரஷ். அந்தக் காலத்தில் அவர்கள் சாப்பிட்ட உணவுகள் சத்தானவை. நார்ச்சத்துகள் நிறைந்த உணவு அவை. இப்போது அப்படியல்ல; நமது உணவுகளும் உண்ணும் நேரமும் வெகுவாக மாறிவிட்டன. நாம் உண்ணும் பொருட்களை மென்று சாப்பிட வேண்டும். நாம் உணவை மென்று சாப்பிட்டாலே உடலில் ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்யும். அப்படியே உணவை விழுங்கும் போது ஜீரண மண்டலத்திற்கான வேலை அதிகம். அதனால் நாளடைவில் பல்வேறு நோய்கள் உருவாகலாம். நாம் பற்களை முறையாகப் பாதுகாத்தால் நெடுநாள்கள் வாழலாம். பற்களின் மூன்று வேலைகள் அழகைத் தருவது. பேசுவதற்கும் மென்று சாப்பிடவும் உதவுவதுதான். இதை மறக்கக்கூடாது.

சிரித்த முகம்-புன்சிரிப்பு அதன் வழியே வெளிப்படுவது பற்கள். அதுவும் வரிசையான அழகான பற்கள்தான்!

ADVERTISEMENT
ADVERTISEMENT