தினமணி கொண்டாட்டம்

தமன்னா வீடு திரும்பினார்

25th Oct 2020 05:01 PM

ADVERTISEMENT


தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த ஆகஸ்டு மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என தமன்னா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற தமன்னாவிற்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.  பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு வரும் தமன்னாவை வாசலிலேயே அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். தான் மீண்டு வந்ததைப் பற்றியும் உருக்கமான விடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த விடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT