தினமணி கொண்டாட்டம்

இளைஞர்கள் இணைந்து உருவாக்கிய பாடல்

25th Oct 2020 04:57 PM

ADVERTISEMENT


சினிமாவில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் "இன்ஸ்டாராணி'  என்ற தலைப்பில் ஒரு விடியோ பாடலை உருவாக்கத் தொடங்கினர்.  சுனில் லாசர் எழுதி, இசையமைத்துள்ள இந்தப் பாடலை, குறும்பட உலகில் வளர்ந்து வரும்  இயக்குநர் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். "பிகில்' பட பிரபலம் அஜித் விக்னேஷ்,  ஸ்ரீநிதி நாராயண் நடித்துள்ளனர்.  நகர மற்றும் கிராமப்புறப் பின்னணிகளில் நடன அசைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.  

மியூசிக் விடியோ பிப்ரவரி மாதம் கிழக்கு கடற்கரைச் சாலையில்  உள்ள ஒரு நட்சத்திர விடுதியிலும், அதையொட்டியுள்ள  நீரடி என்ற  கிராமத்திலும் படமாக்கப்பட்டது.  அமல் டோமி  ஒளிப்பதிவில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. கொவைட் }19 காரணமாக பாடலின் காட்சிகள் கேரளத்துக்கு  அனுப்பப்பட்டு,  அங்கு அமல் டாமியின் மேற்பார்வையில் பிந்தைய தயாரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.  

நடிகர் விவேக் கடந்த மாதம் இப்பாடலை வெளியிட்டுள்ளார்.  சோனி மியூசிக் சவுத் யூடியூப்  சேனலில் இந்த விடியோ பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.  இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன் பாடலில் நடித்த  அஜீத் விக்னேஷையும்  தொடர்பு கொண்டு  பாராட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலர் இந்தப் பாடலுக்கு தங்களது வரவேற்பான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT