தினமணி கொண்டாட்டம்

முதல் தடவையல்ல

25th Oct 2020 06:00 AM | தொகுப்பு: ராஜ்

ADVERTISEMENT


விவேகானந்தர் அதிகமாகப் பிரபலமடையாமல் இருந்தபோது தென்னிந்தியாவில் ரயிலில், பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அதே பெட்டியில் இருந்த வெள்ளைக் காரப் போர் வீரர்கள் சந்நியாசிகளைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தனர். விவேகானந்தர் மறுத்து எதுவும் சொல்லவில்லை.

சேலம் ஸ்டேஷனில் அவர் அதிகாரியுடன் ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு போர் வீரர்களுக்கு வியப்பாக இருந்தது.

ரயில் புறப்பட்டதும், “"உங்களுக்குத்தான் நன்றாக ஆங்கிலம் தெரிகிறதே. நாங்கள் கூறிய கருத்துகள் குறித்து ஏன் எதுவும் மறுத்துப் பேசவில்லை?'” என்று கேட்டனர்.

"முட்டாள்களை நான் சந்திப்பது இது முதல் தடவையல்ல'” என்று அவர் கூறியதைக் கேட்டு வாயடைத்துப் போயினர்.

ADVERTISEMENT

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT