தினமணி கொண்டாட்டம்

அம்மா உணவகம்

25th Oct 2020 05:02 PM

ADVERTISEMENT


மனித நேயமும் சமூக அக்கறையும் கொண்ட ஒருவர் சில இளைஞர்களுக்கு தம்மிடத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். வெவ்வேறு லட்சியங்களுடன் இந்த இளைஞர்கள் பயணிக்கின்றனர். அதே குடியிருப்பில் பல கனவுகளோடு வெவ்வேறு எளிய குடும்பங்களும் வசிக்கின்றனர்.  

இவர்களின் லட்சியங்களுக்கு பின்னணியில் உள்ள சம்பவங்களை களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "அம்மா உணவகம்'.  விவேக பாரதி இப்படத்தை எழுதி இயக்குகிறார். "வசந்தம் வந்தாச்சு',  "என்றுமே  ஆனந்தம்',  "பாசக்கார பய' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் சிறு இடைவெளிக்குப் பின்  இப்படத்தை இயக்குகிறார்.  

இப்ராஹீம் தயாரிக்கிறார்.    அஸ்வின் கார்த்திக், சசிசரத்,  ஸ்ரீநிதி,  "குள்ளபூதம்' இந்திரன்  உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதையின் பிரதான கதாபாத்திரத்தில் இயக்குநர்  ஆர்.வி உதயகுமார் நடிக்கிறார். மோகனராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.  - சுலக்ஷா  டாடி இசையமைக்கிறார்.

பாடல்கள் - டாக்டர்.கிருதியா, நியூட்டன், ஜான் தன்ராஜ்.  படத்தொகுப்பு - உதயா கார்த்திக். இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பொது முடக்க தளர்வுகளுக்கு பின் தொடங்கியது. சென்னையில் மட்டும் ஒரே கட்டமாக 35 நாள்கள் படப்பிடிப்பு  நடத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT