தினமணி கொண்டாட்டம்

குடும்பக் கட்டுப்பாடு

25th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT


பட்டிமன்ற மேடை. கவியரசர் கண்ணதாசன்  ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.

பட்டிமன்றத்தலைவர் ம.பொ.சிவஞானம். தலைப்பு: குடும்பக் கட்டுப்பாடு 
முதலில் பேசிய அரு.நாகப்பன் சபைத் தலைவருக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார்:

"கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர். அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை. முதலில் மேடையை விட்டு அவரைக் கீழே இறக்குங்கள்!'

சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது. தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், "எனக்குப் பதினான்கு குழந்தைகள் என்பது உண்மை. குடும்பக் கட்டுப்பாட்டின் அருமை எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள். அவருக்குத்தான் தகுதியில்லை. அவரை முதலில் கீழே இறக்குங்கள்' என்று ஒரு போடு போட்டாரே பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

சபையில் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT