தினமணி கொண்டாட்டம்

வாரியர் ஆற்றிய சொற்பொழிவு

18th Oct 2020 06:00 AM | -கோட்டாறு ஆ.கோலப்பன்

ADVERTISEMENT


திருவாரூரில் மேடையில் இருந்த வாரியாருக்கு மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கெனவே வாரியாரின் கழுத்தில் மாலை இருந்ததால் தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.

இதை அறிந்த வாரியார், மாலையை கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல் விறுவிறுவென வாரியாருக்கு மாலை அணிவித்தார் அன்பர்.

அப்போது கூட்டத்தினரை பார்த்து "எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது  கொடுத்தால் தான், அடுத்தவர்கள் நமக்கு கொடுப்பார்கள்' என்றார் வாரியார்.

மேடை முன் அமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து "நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?'  என்று கேட்டார் வாரியார்.

ADVERTISEMENT

சிறுவர்கள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரைப் பார்த்தனர். சிரித்துக் கொண்டே இதோ இங்கே இருக்குது அசைவ உணவு சாப்பிடும் அனைவருக்கும் அவரவர் வயிறே சுடுகாடு என்று கூறி வயிற்றைத் தடவி காண்பிக்கக் கூட்டத்தில் பலத்த சிரிப்பொலி.

(கிருபானந்த வாரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT