தினமணி கொண்டாட்டம்

 ஹிட்லரின் கோபம்

நிலா

உலகப் போர் நடந்தபோது ஹிட்லர் ஒரு பிரத்யேக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தன்னுடைய விசுவாசமான 50 ராணுவ அதிகாரிகளை அழைத்து இங்கிலாந்தை தாக்குவது எப்படி என்று வியூகம் அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று ஒரு தும்மல் சத்தம்.. வரைபடத்தில் கவனமாயிருந்த சர்வாதிகாரி, உணர்ச்சியற்ற குரலில் கேட்டார்..
"யார் இங்கே தும்மியது?'
ஆழ்ந்த மெளனம்தான் பதிலாய்க் கிடைக்க வெகுண்ட சர்வாதிகாரி, இப்போது சொல்லவில்லையென்றால் உங்களில் 10 பேரை சுட்டுக்கொல்ல உத்தரவிடுவேன்..!
மீண்டும் மெளனம்.. முதல் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேரை ஹிட்லரின் அந்தரங்க காவல் படையினர் வெளியில் அழைத்துச் சென்றனர்.. பின்னர் பல சுற்றுகள் வெடி முழங்கும் ஓசை.. மறுபடியும் ஹிட்லர் கேட்டார்..
"இப்போதாவது சொல்கிறீர்களா.. அல்லது மேலும் 10 பேரை பரலோகம் அனுப்பட்டுமா..?'
மீண்டும் பேரமைதி.. மீண்டும் வெடிச் சத்தம்.. மீண்டும் ஹிட்லர் கேட்க,  ஒரு இளம் அதிகாரி நடுங்கும் உடலுடன் எழுந்து நின்று சொன்னான்.. மன்னியுங்கள் ஜெனரல்.. நான் தான் தும்மினேன்.
ஹிட்லர் மெல்ல அவனை நோக்கி நடந்து வந்து அவன் கரத்தைப் பற்றி வலுவாக குலுக்கிவிட்டு சொன்னார்..
"நன்றி மகனே.. தும்மல்கள் என்னைப் பொருத்தவரை ராசியான சகுனங்கள்!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT