தினமணி கொண்டாட்டம்

"சிங்கிள் ஷாட்' சினிமா

29th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

 

புதுப் புது முயற்சிகளில் அவ்வப்போது சினிமாக்கள் உருவாவதுண்டு.  அந்த வரிசையில், இதோ ரசிகர்களை மயக்கத்தில்  ஆழ்த்த வரவிருக்கும் படம் "யுத்த காண்டம்'.  "கன்னிமாடம்' படத்தின் மூலம் பரவலான பாராட்டுதல்களைப் பெற்ற  ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.  "கோலி சோடா 2' க்ருஷா குரூப்  கதாநாயகியாக நடிக்கிறார்.  இவர்களுடன் யோக் ஜேபி, சுரேஷ் மேனன்,  போஸ் வெங்கட்டும் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

ஆனந்த்ராஜன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இனியன் ஜே.ஹேரிஸ் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் ஹரி சாய் இசையமைக்கிறார். மனித வாழ்க்கையில் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதும், பிரச்னை என்றால் காவல் நிலையம் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றே. அப்படித்தான், ஒரு விபத்தில் சிக்கும் இருவர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை எதார்த்தமாக பதிவு செய்வதே திரைக்கதை. 

இப்படத்துக்காக சிங்கிள் ஷாட் காட்சிகள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளன. வசனங்களை போஸ் வெங்கட் எழுதியுள்ளார். படத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கதையின் நிகழ்வுகளை அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்பதால்  சிங்கிள் ஷாட்டில் படம் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதற்காக  முழுபடப்பிடிப்பு போலவே ஒத்திகையும் நடந்துள்ளது.  சிங்கிள் ஷாட்டில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் பதிவு செய்வது என்பது மிகவும் சவாலானது. ஆனால், எந்த நெருடலுமே ஏற்படாத வண்ணமே இவை அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT